#mystory
#chinnachinnaaasai
அந்தி மயங்கும் நேரம், காற்றில் மண் வாசம், அடை மழை பெய்து கொண்டிருந்ததது. மீனாம்பாள் பாட்டி, தன் பேத்தி கிருதுஷ்யாவுடன் உரையாடி கொண்டிருந்தாள். மீனாம்பாள் தனது மகள் வீட்டுக்கு மகளை பார்க்க வந்திருந்தாள்.
அவளுக்கு 4 மகன்கள், ஒரு மகள், அனைவரும் வெவ்வேறு இடத்தில் வசிக்கின்றனர். எனவே மீனாம்பாள் பாட்டி தன் கணவன் இறப்புக்குப் பின் சொந்தக் கிராமத்தில் வசித்து வந்தாள். ஒரு திங்கள் கிழமையில் மகளைப் பார்க்க வந்தாள். மகள் மற்றும் மருமகன் இருவரும் வேலைக்குச் சென்று இருந்தார்கள். கால தாமதம் ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. எனவே பேத்தியுடன் மீனாம்பாள் உரையாடிக் கொண்டிருந்தாள்.
பேத்தி ஆண்டு விடுமுறையில் சுற்றுலா சென்று இருந்தப் போது தாஜ்மஹால் அருகில் நின்று எடுத்தப் புகைப்படங்களைக் காட்டினாள். மீனாம்பாள் தன் பேத்திக் காட்டியப் புகைப்படங்களை ரசித்து, தன் கதையை கூறலானாள்.
மீனாம்பாள் பாட்டி கிராமத்தில், தோட்டத்தில் காய்கறிகளை நட்டு, சந்தையில் விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். அவள் வீட்டில் இலவச அரசாங்க தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே இருந்தது. அதில் பொதிகை தொலைக்காட்சியில் ஞாயிற்று கிழமை மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பு ஆகியதை பார்த்து வந்தாள்.
ஒருநாள் ஜீன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப் பட்டு இருந்தது. அதில் ஏழு உலக அதிசயங்கள் வரும் பாடலை கண்டதை பற்றியும், அங்கேயெல்லாம் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆவல் உண்டாகியதைப் பற்றியும், எப்போ எல்லாம் அந்த திரைப்படப் பாடல் ஒளிப்பரப்பப் படுகிறதோ அப்போ எல்லாம் கண்டு மகிழ்ந்தத் தருணத்தைப் பற்றியும் கூறி, இந்த தாஜ்மகால் எல்லாம் நான் தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கேன். தன் தோட்டம், மற்றும் வயலில் தான் விளைவிக்கும் சோளம், காய்கறி பற்றி எல்லாமே ரசித்து கூறிக் கொண்டு இருந்தாள்.
இதை கேட்டதும் கிருதுஷ்யாவிற்கு நேரில் சென்று பச்சை பசேல் என இருக்கும் இடங்களுக்கு சென்றுக் கண்டுக்களிக்க வேண்டும் என்று இருந்தது. அதுவரை அவள் பாட்டி வீட்டுக்கு சென்றதே இல்லை. கிராமத்தில் வசதி ஏதும் இருக்காது, என அவளது மருமகன் பேத்தியை அனுப்பவேமாட்டார். பாட்டி ரசித்துக் கூறியதை கேட்டதுமே, கிருதுஷ்யா, நான் உன்கூட வரேன் பாட்டி என்றாள்.
பாட்டியை ஒரு நிமிடம், நிற்க சொல்லி புகைப்படம் எடுத்தாள். ஒரு தாஜ்மஹால் புகைப்படத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தாள். பாட்டி, தாஜ்மஹால் அருகில் நிற்பது போல் புகைப்படத்தை இணைக்கும் மென்பொருளில் இணைத்து மீனாம்பாள் பாட்டியிடம் காட்டினாள். பாட்டி இதை பாருங்க.🙈🙈
நான் பெரியவள் ஆனதும் உன்னை உலக சுற்றுலாவுக்கே அழைத்து செல்கிறேன் போதுமா என்றாள்.
என்ன இப்போ கிராமத்துக்கு கூட்டிட்டுப் போங்க பாட்டி என்று ஆசையாக கேட்டாள். நான் வயல் எல்லாம் பார்த்து, புகைப்படம் எடுக்கணும். என் சின்ன ஆசையை பூர்த்தி செய், பாட்டி என அன்புடன் ஆணையிட்டாள். மீனாம்பாள் பாட்டி தன் சின்ன ஆசை நிறைவேற்றிய பேத்தியை மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தாள். கண்டிப்பாக உன்னை நம்ம கிராமத்துக்கு கூட்டிட்டு போறேன் என் செல்லமே என்று முத்தமிட்டாள்.❤❤
❤❤நிறைவு ❤❤
-சௌமியா அசோக் குமார்
No comments:
Post a Comment