#mystory
❤😍கண்ணாடிமாளிகை இளவரசி😍❤
“அற்றைத் திங்கள் அந்நிலவில்" கானகத்தில் பாரிஜாத மலரின் நறுமணம் வீச , மின்மினி பூச்சிகள் நிலவொளியில் மிளிர அக்கானகமே அழகாகக் காட்சி அளித்தது. காடுத் தாண்டி, மலை தாண்டி, கடல் தாண்டி இளவரசன் இன்பதேவன் அக்கானகம் வந்து சேர்ந்தான். நிலவொளியில் சுற்றும், முற்றும் பார்த்தான், யாரும் கண்ணுக்கு புலப்படவே இல்லை. சிறிது தூரம் சென்றதும், ஒரு கண்ணாடி மாளிகை தென்பட்டது. அங்கு சென்று, வெளியில் நின்று மாளிகையின் அழகை நிலவொளியில் ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சத்தம் இங்கே வராதீர்கள், திரும்பி சென்று விடுங்கள் என்று கேட்டது.
இன்பதேவன் ஏன் என்று வினா எழுப்பினான். சிறிது நேரம், பதில் ஏதுமில்லை. சற்றே ஆசுவாசப்படுத்தி தன் சோகக் கதையை கூறலானாள். இளவரசி இன்பதேவி சிறு வயதில், அவளது அகவைத் தினத்தன்று இன்பமயமாகக் காட்சியளித்தாள். அன்று கடற்கரையோரம் ஒரு அற்புதவிளக்கை கிடைக்கப்பெற்றாள். அதில் இருந்து ஒரு மாயக்குரல் என்ன வேண்டுமோ கேள் என்றது,
ஏதும் அறியாத வயதில் நாம் பார்க்கும் அனைத்தும் கண்ணாடியாக மாறினால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அதையே வரமாகக் கேட்க, அதன்படியே நடக்கிறது. அவள் கண்ணால் பார்க்கும் அனைத்தும் கண்ணாடியாக மாறுகிறது. அவள் பருவ வயதை அடைந்ததும் தன் தவறை எண்ணி வருந்தி அவள்,பயத்தில் கண்ணாடி கூண்டில் அடைந்து இருப்பது உணர்ந்து மிகவும் வருந்தினாள். அவளது அரண்மனை கூட கண்ணாடி மாளிகையாக மாறியது.
அந்த அற்புத விளக்கை பற்றிய ரகசியம் அந்த கடற்கரையில் உள்ள தங்கமீனுக்கு மட்டுமே தெரியும். சாபத்தினால் ஒரு ராஜா, தங்கமீன் போன்று வாழ்ந்து வந்தார். இதைப்பற்றி இளவரசி இன்ப தேவிக்கு தெரியாது. இவளது கதையை கேட்டதும் இளவரசன் தன் அப்பாவை காணாமல் இக்கானகம் தேடி வந்ததாகக் கூறினான். அவரது அரண்மனையில் ஆருட ஜாம்பவான் குசேலேசரன் ஒரு கமண்டலத்தில் தீர்த்தம் கொடுத்து அனுப்பினார்.
ஒரு முனிவரின் சாபத்தால் ராஜா தங்கமீனாக மாறி இருப்பதை அறிந்துக் கொண்டார். தங்கமீனை காணும் போது அத்தீர்த்தத்தை தெளிக்கச் சொல்லி அனுப்பினார்.
வருடங்கள் உருண்டோடியது.
இப்போது தான் இன்ப தேவியை சந்தித்து இக்கதையை கேட்டு கடற்கரை சென்றான். அங்கே தங்கமீன் கரை ஒதுங்கி துடித்துக் கொண்டிருந்தது. அதன் மேல் தீர்த்தம் தெளித்தான். வயது முதிர்ந்த ராஜாவாக மாறியது. இளவரசன் மனம் மகிழ்ந்தான். இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். இவ்வளவு நாள் தங்கமீனாக இருந்தாலும் நன்றாக இருக்க இக்கடற்கரை அருகே உள்ள மூலிகை மரங்கள் தான் காரணம் ஆகும். என்று ராஜா கூற, இளவரசன், இளவரசி கதையை எடுத்துரைக்கலானன்.
ராஜா தனது பழைய நினைவுகள் நினைவுக்கு வர, சிறுமியாக இருந்த இளவரசி நினைவுக்கு வந்தாள். அப்போது அருகாமையில் இருந்த ஒரு மரத்தடியில் இருந்த முனிவரை, பிச்சைக்காரை போல இருக்கிறாயே நீ, என்று ஏளனம் செய்ய, சாபம் விடுத்தார். தங்கமீனாக மாறி கடற்கரையில் நீந்தி கொண்டிருந்த போது தான் கடற்கரையின் அடியில் இருக்கும் பழங்காலக் கோவிலில் அற்புத விளக்கை பற்றிய ரகசியம் அக்கோவிலில் சிற்பமாக செதுக்கப்பட்டு, எழுதியும் இருந்தது. அற்புதவிளக்கில் ஆமணக்கு எண்ணெய் ஊற்றி, பௌர்ணமி நிலவொளியில் கடற்கரையில் விட்டால் அதன் மகிமை மறைந்து விடும் என அதில் இருந்தவற்றை இளவரசியிடம் தெரிவித்தார்கள். அதன் படியே செய்ய, அனைத்தும் பழைய நிலைக்கு மாறியது.
இளவரசன் இன்பத்தேவனும், இளவரசி இன்பதேவியும்
“அற்றைத் திங்கள் அந்நிலவில்" நடந்த நிகழ்வுகளை நினைத்தே களிப்புடன் இன்பமயமாக வாழ்ந்து வந்தார்கள்.
அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்த தருணம், என்றும் நீங்கா நினைவுகளில்.....❤😍😍🥰💞💞💞
❤நிறைவு❤
-சௌமியா அசோக் குமார்
Good one
ReplyDeleteThank you so much anna😍😍
DeleteLoved the ending! Nice story
ReplyDelete❤😍😍 Thank you so much😍❤❤ your name pls
Delete