#mystory
அந்தி மயங்கும் நேரம், காற்றில் மண் வாசம், அடை மழை பெய்து கொண்டிருந்ததது. சகுந்தலா தேவி பாட்டி, தன் பேத்தி நிலாஷினியுடன் உரையாடி கொண்டிருந்தாள். தனது மகள் வீட்டுக்கு, மகளைப் பார்க்க வந்திருந்தாள்.
அவளுக்கு 4 மகன்கள், ஒரு மகள், அனைவரும் வெவ்வேறு இடத்தில் வசிக்கின்றனர். எனவே சகுந்தலா தேவி தன் கணவன் இறப்புக்குப் பின் சொந்தக் கிராமத்தில் வசித்து வந்தாள். ஒரு திங்கள் கிழமையில் மகளைப் பார்க்க வந்தாள். மகள் மற்றும் மருமகன் இருவரும் வேலைக்குச் சென்று இருந்தார்கள். கால தாமதம் ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. எனவே பேத்தியுடன் சகுந்தலா தேவி உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் தோட்டத்தில் ஆழகாக பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் பற்றியும், பழங்கள், காய்கறிகள் பற்றி கூறினாள்.
சகுந்தலா தேவி அவளது கிராமத்தில், தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள் நட்டு வைத்து இருந்தாள். அதில் வரும் காய்கறிகள், பழங்கள் வீட்டு தேவைக்கு போக மீதியை சந்தைக்கு மொத்தமாக கொடுத்தார்கள். அவ்வளவு அழகான, நல்ல காற்றோட்டாமான வீடு, சகுந்தலா தேவியின் மகள் நம்ம கிராமத்துல எந்த வசதியுமே இல்லை. பக்கத்து ஊரில் சென்று அவள் படித்து இருந்ததால் நல்ல வரன் வந்தது. நான் நகரத்தில் இருக்கும் மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்வேன் என்று அடம்பிடித்து கட்டினாள். கல்யாணம் முடித்த பிறகு சகுந்தலா தேவியின் மாப்பிள்ளை கிராமத்தில் எந்த வசதியும் இருக்காதுனு சொல்லி ஊருக்கு வரமாட்டாங்க.
இரவு மணி 10 ஆகி இருந்தது. மகளும், மருமகனும் வீடு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் ரொட்டி, ஜாம் சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார்கள். காலை எழுந்ததும் மகளை பார்த்தாள். ஆளே மாறி போயிருந்தாள். கண்ணாடி அணிந்து,நோய் வாய் பட்டது போல் இருந்தாள், சகுந்தலா தேவிக்கு மகளை பார்த்ததும்,
" அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். என்ற குறளுக்கேற்ப அளவு கடந்த அன்பு வைத்திருந்த மகளின் முகத்தினைப் பார்த்ததுமே அவளின் துன்பத்தை அறிந்து கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. அதைப் பார்த்ததும் தன் மேல் அம்மாவுக்கு எவ்ளோ அன்பு என மகளுக்கும் கண்ணீர் வந்தது. அம்மா நான் தப்பு பண்ணிட்டேன் நகரத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்போ வாழ்க்கை முழுவதும் ஓடிட்டே இருக்கேன்மா. வீட்டு வாடகைக்கே சம்பாரிக்கணும் போலருக்கு. காய்கறி, அரிசி எல்லாமே அவ்ளோ விலை. ரெண்டு பேரு சம்பளமே பத்தமாட்டேங்கிது என்றாள். சகுந்தலா தேவிக்கு மகள் மேல அவ்ளோ பாசம்,எப்படி வளந்த பொண்ணு இங்க வந்து இப்படி ஆகிட்டேனு கண்ணீரோட சொன்னாள்.
அன்று இரவே பயங்கரமான புயல், வெள்ளம், அலுவலகம் அனைத்தும் மூடிவிட்டார்கள். சாப்பாடு, தண்ணீர், மின்சாரம் அனைத்தும் நிர்முலமானது. வாங்க மாப்பிளை நம்ம கிராமத்துக்கு போவோம் என்று கூறி படாதபாடுபட்டு ஊருக்கு சென்றார்கள்.
அங்கு வாசலில் சகுந்தலா தேவியின் மகள் ஆசையுடன் வளர்த்த பசுமாடு கூட கண்ணில் கண்ணீருடன் நாக்கினால் நக்கியது. உங்களை எல்லாமே விட்டுவிட்டு நான் நகரத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போனேன்னு கண்ணீருடன் தடவிக் கொடுத்தாள். என்ன தான் நகரத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போனாலும் அவள் வளர்த்த பசுவின் அன்பை பார்த்தவுடன் கண்ணீர் பொங்கியது. அவள் கணவரிடம் நம்ம இங்கேயே காய்கறி வியாபாரம் செய்து நிம்மதியாக வாழலாம். இவங்கள எல்லாம் விட்டு என்னால அங்க வந்து கஷ்டப்பட முடியாதுனு சொல்லி சம்மதம் வாங்கினாள். குறைவாக சம்பாரித்தாலும் நிறைவாக வாழ்ந்தார்கள்.
❤நிறைவு ❤
சௌமியா அசோக் குமார்