Wednesday, 26 March 2025
அமிர்தானந்தமயி அம்மா
தூயவளே எந்தன் துன்பங்கள் போக்கும் தூர்கா தேவியே.!
உந்தன் கருணை பார்வைதனை கண்ணில் காணும் போது உலகத்தில் உள்ள அனைத்து அமைதியும் காண்கிறேன்.
அமிர்தபுரியில் குடிகொண்டிருக்கும் அமிர்தேஸ்வரி தேவியே அமுது போன்ற உந்தன் அமுத மொழிகளை கேட்க, கேட்க பார்க்கடலில் கிடைத்த அமிர்தம் போல, அத்தனை இன்பசுவை.
எங்கள் பாவங்களை போக்கும், பகவதி அம்மனே!
உந்தன் அன்பிலும், அரவணைப்பிலும் எத்தனை,எத்தனை இன்பம்!.
ஆரத்தியில் உந்தன் முகமலர்ச்சி காண, காண கோடி இன்பம் ❤
உலகத்திருக்கே அன்னையாக விளங்கும் அன்னபூரணியே எத்தனை , எத்தனை மக்களுக்கு,
காசியில் வீற்றிருக்கும் அன்னபூரணி போல் தினம், தினம் உணவளிக்கிறாய்!.
புதுக்கோட்டை புவனேஷ்வரி போல், புவனத்தை ஆளும் தேவியே,
திருச்சியில் குடி கொண்டிருக்கும் சமயபுரம் மாரி போல் உலக மக்களுக்காக நீ தினம், தினம் விரதம் இருந்து உந்தன் கருணை மழையை பொழிகிறாய். இன்னல்களில் சமயத்தில் வந்து காக்கிறாய்.
கர்மவினை தீர்க்க, கலியுகத்தில் பிறந்த காளிமாதவும், கண்ணனும், சிவனும், லலிதா அம்பிகையும் நீயே.
ஜகத்தினை காக்கும் ஜகத்ஜனனியே!
உந்தன் மூக்குத்தியின் ஜொலிப்பில், உந்தன் முகம் காண, தோன்றிய அன்னை அபிராமியின் மறுபிறவியும் நீயே!
புன்னைநல்லூர் மாரியின் புன்சிரிப்பினை காண்பது போல், உந்தன் புன்னகையை கண்டு புளங்காகிதம் அடைந்தோம்.
உந்தன் ஆயிரம் முகபாவனைகளை காண, காஞ்சியில் வீற்றிருக்கும் காஞ்சி காமாட்சியாய் போல அத்தனை அழகு நீ, உந்தன் அழகை ரசிக்க கோடி, கோடி கண்கள் வேண்டும்.
அகிலத்தை காக்கும் அன்னை அகிலண்டஸ்வரியே!
நிந்தன் பொற்பாதங்கள் போன்ற திருவடியில் சரணடைகிறோம் தேவியே!
-சௌமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment