Wednesday, 26 March 2025
கண்ணா
கண்ணாவும் நீயே, ராதாவும் நீயே!
உந்தன் காதலும் வேண்டா, கலவியும் வேண்டா!
உந்தன் திருவடியில் இருக்கும் மலராகவும், உந்தன் சிரத்தில் இருக்கும் மயில் இருக்கு
இறகாகவும் இருக்கும் வரம்தனை அளித்தால் எந்தன் பிறவிபயன்.
வாழ்நாளில் பாதி கழிந்தாலும் வாழ்க்கையில், உன்னை கண்ணில் காணும் பாக்கியம் கூட இப்பிறவியில் எனக்கு அளிக்காத இப்பிரபஞ்ச தாய்.
அடுத்த ஜென்மம் அளித்து
கர்மவினை தொடரும்படி எனக்கு மறுஜென்மம் அளிக்க வேண்டாம்.
ஜென்ம, ஜென்மமாய் தொடரும் பந்தத்தை இப்பிறவியிலே நான் உணர்ந்து கொண்டேன்.
காத்திருந்து, காத்திருந்து கண்கள் குளமாகி போனாலும்,
காத்திருப்பிலும், கலவியிலும் இல்லை காதல்,
கண்களால் காணாதவரை கனவில் கண்டு, காற்றில் வரும் நாதத்தை கேட்டு நினைவில் நீங்காமல், காட்சிகள் கண்களை விட்டு அகலமால் இருப்பதே ஜென்ம பந்தம் என்று தெரிந்து கொண்டேன்.
விட்டம் தனை பார்க்கும் போது,
விட்டலா நீ சயனகோலத்தில் காட்சியளித்தாய் .
நித்தம், நித்தம் உந்தன் நாதம் செவிகளில் தேனீகள் ரீங்கரம் இடுவது போல் கேட்கிறதே.
வேறு சிந்தை ஏது நாதா .
நிந்தன் வாழ்நாளில்,
கண்ணாலும் கண்ணா, புல் ஆனாலும் கண்ணா,
கடற்கரைதனில் கிருஷ்ண பட்சி வட்டம் விட்டு கொண்டே இருக்கும் போது ஆழ்கடல் தனில் நீ ஆழிலை கண்ணனாக, ஆழ்கடலில் மறைந்து, இருந்து மாயம் செய்கிறாயோ என்று சிந்தை..
சிந்தை முழுவதும் நீயே கிருஷ்ணா , சீக்கிரம் வருவாய், மனம் மகிழ்விப்பாய்
-❤❤♥️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment