Wednesday, 26 March 2025

அமிர்தானந்தமயி அம்மா

தூயவளே எந்தன் துன்பங்கள் போக்கும் தூர்கா தேவியே.! உந்தன் கருணை பார்வைதனை கண்ணில் காணும் போது உலகத்தில் உள்ள அனைத்து அமைதியும் காண்கிறேன். அமிர்தபுரியில் குடிகொண்டிருக்கும் அமிர்தேஸ்வரி தேவியே அமுது போன்ற உந்தன் அமுத மொழிகளை கேட்க, கேட்க பார்க்கடலில் கிடைத்த அமிர்தம் போல, அத்தனை இன்பசுவை. எங்கள் பாவங்களை போக்கும், பகவதி அம்மனே! உந்தன் அன்பிலும், அரவணைப்பிலும் எத்தனை,எத்தனை இன்பம்!. ஆரத்தியில் உந்தன் முகமலர்ச்சி காண, காண கோடி இன்பம் ❤ உலகத்திருக்கே அன்னையாக விளங்கும் அன்னபூரணியே எத்தனை , எத்தனை மக்களுக்கு, காசியில் வீற்றிருக்கும் அன்னபூரணி போல் தினம், தினம் உணவளிக்கிறாய்!. புதுக்கோட்டை புவனேஷ்வரி போல், புவனத்தை ஆளும் தேவியே, திருச்சியில் குடி கொண்டிருக்கும் சமயபுரம் மாரி போல் உலக மக்களுக்காக நீ தினம், தினம் விரதம் இருந்து உந்தன் கருணை மழையை பொழிகிறாய். இன்னல்களில் சமயத்தில் வந்து காக்கிறாய். கர்மவினை தீர்க்க, கலியுகத்தில் பிறந்த காளிமாதவும், கண்ணனும், சிவனும், லலிதா அம்பிகையும் நீயே. ஜகத்தினை காக்கும் ஜகத்ஜனனியே! உந்தன் மூக்குத்தியின் ஜொலிப்பில், உந்தன் முகம் காண, தோன்றிய அன்னை அபிராமியின் மறுபிறவியும் நீயே! புன்னைநல்லூர் மாரியின் புன்சிரிப்பினை காண்பது போல், உந்தன் புன்னகையை கண்டு புளங்காகிதம் அடைந்தோம். உந்தன் ஆயிரம் முகபாவனைகளை காண, காஞ்சியில் வீற்றிருக்கும் காஞ்சி காமாட்சியாய் போல அத்தனை அழகு நீ, உந்தன் அழகை ரசிக்க கோடி, கோடி கண்கள் வேண்டும். அகிலத்தை காக்கும் அன்னை அகிலண்டஸ்வரியே! நிந்தன் பொற்பாதங்கள் போன்ற திருவடியில் சரணடைகிறோம் தேவியே! -சௌமி

அம்மா கிருஷ்ணா

கண்ணாவும் நீயே, ராதாவும் நீயே! உந்தன் காதலும் வேண்டா, கலவியும் வேண்டா! உந்தன் திருவடியில் இருக்கும் மலராகவும், உந்தன் சிரத்தில் இருக்கும் மயில் இருக்கு இறகாகவும் இருக்கும் வரம்தனை அளித்தால் எந்தன் பிறவிபயன். வாழ்நாளில் பாதி கழிந்தாலும் வாழ்க்கையில், உன்னை கண்ணில் காணும் பாக்கியம் கூட இப்பிறவியில் எனக்கு அளிக்காத இப்பிரபஞ்ச தாய். அடுத்த ஜென்மம் அளித்து கர்மவினை தொடரும்படி எனக்கு மறுஜென்மம் அளிக்க வேண்டாம். ஜென்ம, ஜென்மமாய் தொடரும் பந்தத்தை இப்பிறவியிலே நான் உணர்ந்து கொண்டேன். காத்திருந்து, காத்திருந்து கண்கள் குளமாகி போனாலும், காத்திருப்பிலும், கலவியிலும் இல்லை காதல், கண்களால் காணாதவரை கனவில் கண்டு, காற்றில் வரும் நாதத்தை கேட்டு நினைவில் நீங்காமல், காட்சிகள் கண்களை விட்டு அகலமால் இருப்பதே ஜென்ம பந்தம் என்று தெரிந்து கொண்டேன். விட்டம் தனை பார்க்கும் போது, விட்டலா நீ சயனகோலத்தில் காட்சியளித்தாய் . நித்தம், நித்தம் உந்தன் நாதம் செவிகளில் தேனீகள் ரீங்கரம் இடுவது போல் கேட்கிறதே. வேறு சிந்தை ஏது நாதா . நிந்தன் வாழ்நாளில், கண்ணாலும் கண்ணா, புல் ஆனாலும் கண்ணா, கடற்கரைதனில் கிருஷ்ண பட்சி வட்டம் விட்டு கொண்டே இருக்கும் போது ஆழ்கடல் தனில் நீ ஆழிலை கண்ணனாக, ஆழ்கடலில் மறைந்து, இருந்து மாயம் செய்கிறாயோ என்று சிந்தை.. சிந்தை முழுவதும் நீயே கிருஷ்ணா , சீக்கிரம் வருவாய், மனம் மகிழ்விப்பாய் -❤❤♥️

கண்ணா

Tuesday, 16 July 2024

அவள்

அனைவருக்கும் வணக்கம்! எனது முதல் ஹைக்கு கவிதைகள்! இரண்டு வரியில், அவளை மையமாக வைத்து எழுதப்பட்டக் கவிதைகள்! தயவு செய்து தனி தனி கவிதைகளாக வாசிக்கவும்! 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 #கவிதை 1 யாரென்று தெரியாத அவள்! என்னவள் ஆனாள்! இன்று மண நாள்!. #அவள் #என்னவள் #மனைவி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 😍😍😍😍😜🌹🌹 #கவிதை 2 அவன் அவள் ஆனாள்! பாலின மாற்றம், உணர்ந்த தருணம்! #திருநங்கை #அவள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ #கவிதை 3 அவள் தினம் சாப்பிடுவது, அவல்! ஏழை வீட்டு குசேலர் மகள், அவள்! #பசி கொடுமை #ஏழை மகள் #அவள் 1) எனது முதல் ஹைக்கூவில், அவள் என்பவள் மனைவியாகவும் 2)இரண்டாவது ஹைக்கூவில், அவள் என்பவள் திருநங்கையாகவும் 3)மூன்றாவது ஹைக்கூவில் அவள், என்பவள் ஏழை மகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்! சௌமியா. அ

தோழி

அனைவருக்கும் வணக்கம்! கவிதையும் முதல் முயற்சி 😜😆😆😆 கவிதை மாதிரி இல்லனா மன்னிச்சு🤭🤭🤭 தோற்றாலும், வென்றாலும் தோள் கொடுப்பார்கள் தோழர்கள்! கடல் கடந்தும், கண்ணால் பார்க்காமல், இணையத்தில் இணைந்து இருக்கும் தோழிகள்! கடல் கடந்தும் பேசட்டும் நம் அனைவரது நட்பை! மொழி, இனம், சாதி பேதம் இல்லா தோழமை, நம்மை ஒன்றே இணைத்திடும் சமூக வலைத்தளம் நமது வாரிசுகளும் போற்றட்டும் நம் தோழமையை!❤💞🌹💖💖😍😍

மதுரை மீனாட்சி

எங்க ஊரு மதுரை இல்லை! ஆனால் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆலவாயை அரசாளும் அங்கயர்கண்ணியை போற்றி ❤😍😍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ முத்தேவியரில் கல்வியின் சக்தி கலைமகளாக ! தைரியத்தின் சக்தி மலைமகளாக! செல்வத்தின் சக்தி அலைமகளாக! முத்தேவர்களில் காத்தலின் சக்தி திருமாலாக! படைத்தலின் சக்தி பிரம்மனாக அழிக்கும் சக்தி ஈசனாக இருக்க எங்கெங்கும் காணும் சக்தியடா! எங்கள் மதுரையின் முக்கண் சுடர்விருந்தே! நெற்றிக்கண்ணனை பார்த்ததும் நாணத்தில் முத்தனம் மறைந்ததே! அர்த்தநாரியில் பாதி ஆனாள், ஆதிசக்தி மீனாட்சி! "நாரி" இல்லையேல், அவனியே இல்லை! எந்தன் ஆலவாயை அரசாலும் சக்தி அங்கயற்கண்ணி! எங்கெங்கும் காணும் சக்தியடா! ஆலவாயின் அரசி அங்கயற்கண்ணியே!

இலவசம்

அரசியல்வாதி கைவசம் பலத்திட்டம் "இலவசம்"