Monday, 31 December 2012

பணத்தினை நேசிக்காதே!




பணத்தினை நேசிக்காதே!

பணம்! பணம்! பணம்!
பணத்தினை நேசிக்காதே!
பணத்தை வைத்து தூங்குவதற்கு இடத்தை வாங்கலாம்.
ஆனால் தூக்கத்தினை வாங்கமுடியாது.
பணத்தை வைத்து புத்தகத்தினை வாங்கலாம்.
ஆனால் அறிவினை வாங்கமுடியாது.
பணத்தை வைத்து விலையுர்ந்த வைர ஆபரணங்களை கூட வாங்கிவிடலாம்.
ஆனால் விலைமதிப்பற்ற கள்ள கபடமற்ற குழந்தையின் சிரிப்பினை வாங்கமுடியாது.
அறிவை வளர்த்துக்கொள்.... பணம் தானாக வரும் என்பார்கள்..
ஆனால் அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ளக் கூட பணம் தான் தேவை..
திறமையிருந்தும் பணமில்லாமல் படிக்கயிலாமல்
இருக்கும் குழந்தைகள் ஒருபுறம்.
கல்வி கற்க வழியேதுமில்லாமல் கல்லுடைக்கும் பிஞ்சு ஏழைக் குழந்தைகள்..
பட்டினியில் வாடி ஒருவேளை சாப்பாட்டிற்காகப் பணமீட்ட படும்பாடு...
பணமே ஏழை, பணக்காரன் என்றப் பேதத்தை உருவாக்க அத்தகையப் பணத்தின் மீது பற்று ஏனடா? மானிடா
பிஞ்சு ஏழைக் குழந்தைகள் பட்டினியில் அழும் அழுகுரல்கள், தின்பண்டம்  அற்று வீதியில் கதறும் ஏழைக் குழந்தைகளின் கதறல்கள் இதையெல்லாம் கண்டால் பண்டமாற்று முறையிலிருந்து எவனடா பணத்தினை கண்டுப்பிடித்தது?.. தேவைக்கு அதிகமாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து இல்லாததைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறையே இருந்திருக்கலாம் என்று நினைக்கத்தோன்றுகிறது..
பணமே ஏழை, பணக்காரன் என்றப் பேதத்தை உருவாக்க அத்தகையப் பணத்தின் மீது பற்று ஏனடா? மானிடா? எத்தனையோ மக்கள் புத்தாண்டை கொண்டாட இயலாமல் இருக்க..
நாம் இந்தப் புத்தாண்டிலாவது நம்மிடம் இருப்பதில் ஒருபங்காவது இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமே என்று ஏன் யோசிக்கக்கூடாது???
இந்தப் புத்தாண்டையாவது ஏன் ஒரு மனதிருப்தியோடு ஆரம்பிக்கக்கூடாது.?
புதிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


                                                                                       சௌம்யா...











No comments:

Post a Comment