பர்வதவர்த்தினி, பர்வதவர்த்தினி பர்வதவர்த்தினி.
பாரினை ஆளும் எங்கள் பர்வதவர்த்தினி,
மதுரையில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதி என்கிற பர்வதவர்த்தினி.
கேசவனின் செல்ல புத்திரி.
அன்னை அனுபிரியாவின், அன்பு புதல்வி.
மூத்தவள் அவள்தனில்,
அழகில் இவள் அன்னை
மீனாட்சி.
நீண்ட மூக்கும், செவ்விதழ் உதடுகளும் தெய்வீக முக லட்சணமும், சிரிப்பில் இவள் அன்னை மீனாட்சி.
ருக்மணி பாளையத்தில் வீற்றிருக்கும் ருக்மணி இவள்.
மதுரை மீனாட்சி வீதியில் உலா வந்தால் காண்போர் கண்ணில் பேரானந்தம்.
புகைப்படக் கலைஞர்களின் செல்ல களஞ்சியம் இவளே.
பனிக்கூழும், பழச்சாறும் விரும்பி பருகும் எங்கள் பர்வதவர்த்தினி.
தந்தையின் தங்கப்பிள்ளை எங்கள் செல்ல மீனாட்சி.